நேற்று மாலை நண்பர்களுடன் வெளியில் சென்ற வேளையில், சினிமா சிட்டி என்று புதிதாய் திறந்துள்ள மல்டிப்ளக்ஸ் பற்றிய பேச்சு வந்தது. என்ன தான் இருக்கிறது பார்ப்போமே என்று போனால் அங்கே ”குர்பான்” என்ற ஹிந்தி திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. சைஃப் அலிகான் என்ற நடிகன் நடிப்பில் முன்னேறி வருபவர் என்ற வகையில் உன்னிப்பாக கவனித்து வருவதால் அந்த படத்திற்கு போக முடிவு செய்தோம்.
குர்பான் - திரைப்படத்தின் கதையொன்றும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. நியூயார்க் என்ற கத்ரினா கைஃப் திரைப்படம் போன்றதே.
புரபசர் அவந்திகாவுடன் புரபசர் இஹ்சானுக்கு காதல் பூக்கும் காட்சிகள் கொள்ளை அழகு.. இதுமாதிரிலாம் நமக்கு தோணவே இல்லையேன்னு நினைத்துக்கொண்டேன். (அப்படியே தோணியிருந்தாலும் டங்குவாரு அந்திருக்கும்)
அவந்திகாவை திருமணம் செய்ய விருப்பம் கேட்டு அவரின் அப்பாவிடம் பேசும் வசனங்கள் ஷார்ப்.
அமெரிக்கா போகும் இந்த குடும்பம் எதிர்வீட்டு இஸ்லாமிய குடும்பத்தாரை சந்திக்க நேர்கிறது. அந்த குடும்பம் முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளில் முழுக்க வேரூன்றி இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெண் தன்னை வேலை செய்ய அனுமதிப்பதில்லை என்பதை சொல்லும் வசனம் சிறப்பு.
இதிலே சம்பந்தமே இல்லாமல் விவேக் ஓபராய் ரியாஸ் மசூத் என்ற பெயரில். செய்தித் தொலைக்காட்சியில் கேமராமேன். ரியாஸ் மசூத் காதலைச் சொல்லும் காட்சி ஒரு கவிதை. Do you want me to go down on one knee.. :-)
விவேக் ஓபராயின் காதலி ஒரு குண்டுவெடிப்பில் இறந்து போகிறார். அதற்கு பழிவாங்கத் துடிக்கும் விவேக், போய் நிற்பது கரீனாவின் வீட்டில்.
இதே நேரம் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நபர்களில் முக்கியமானவர் சைஃப் அலிகான் என கரீனாவுக்கு தெரியவருகிறது.
இனி நடப்பவைகளை வெண்திரையில் காண்க..
திரைப்படத்தின் சிறப்பம்சம் இசை. சலீம் மெர்சண்ட் & சுலைமான் மெர்ச்சண்டின் இசை நம்மை இருக்கை நுனிக்கு கொண்டு வருகிறது. கரன் ஜோஹரின் கதை என்கிறார்கள். மனுசனுக்கு மக்களின் நாடித்துடிப்பு சரியா கிடைச்சிருக்கு..
இந்த திரைப்படம் என்னை உலுக்கிய இடங்கள்..
1. எவ்வளவு தான் படித்த பெண்களாய் இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தடுமாறிப் போகிறார்கள்.
2. Islamic Fundamentalist - இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது பலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
3. கல்லூரியில் நடக்கும் விவாதத்தில் அமெரிக்கப் பெண் கேட்கும் கேள்விகள், அதற்கு விவேக் ஓபராயின் பதில்கள்.
4. ”ஆபா”வின் காரணங்கள்
5. அமெரிக்கர்களின் தொழில் ஈடுபாடு.. (சாகப்போவது தெரிந்தும் மற்றவர்களைக் காக்க நினைத்த வீரம் Agent Hayes..)
இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக குறைசொல்ல முடியாது என்றாலும் 9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை மற்றவர்கள் பார்க்கும் பார்வை மாறி இருக்கிறது.
நண்பர்களுக்கு..
இந்த படம் பார்த்தால், ஏற்றுக்கொள்வீர்கள், வெறுப்பீர்கள், சில விவாதங்களில் குழப்பமடைவீர்கள், சில விவாதங்கள் சூடேற்றும். ஆனால் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
குர்பான் - தியாகம்.
சனி, 21 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)