வலிகளினதும் இரைச்சலினதும்
ஆனதான உலகத்தில்
கைபிடித்து இழுத்து வந்தாள் தாய்
உள்ளார வருந்தும் கணங்களில்
மடி சாய்ந்து அழ முடிகிறது அவளிடம்
பிடித்த பெண்ணைப் பற்றியோ
பிடித்த விஷயம் பற்றியோ
ஒரு பெண்ணியப் பார்வையை
என்னிடம் புகுத்தியவள் சகோதரி
தேவதைகள் எப்போதும்
என்னைச் சுற்றியே இருக்கிறார்கள்..
குளிர்பானம் முதல்
அசைன்மெண்ட் வரை
பகிர்ந்து கொண்டு
காதல் முதல் கவிதை வரை
அத்தனையும் விவாதித்து
அழகான சட்டை எடுப்பது முதல்
முறையாக ஆங்கிலம் கற்றது வரை
என்னுடன் வந்த தோழி
சொந்தங்களைப் பிரிந்து,
கைபிடித்த காரணத்தால்
உலகின் கடைசி வரை
கூட வரும் மனைவி
தேவதைகள் எப்போதும்
என்னுடனேயே இருக்கிறார்கள்..
இரவின் நிசப்தத்தை
சன்னமாய் அறுத்தெறியும்
விசும்பலில் கூட
ரீங்காரமாய் மகள்
தேவதைகள் எப்போதும்
அருகில் இருக்கிறார்கள்..
தனியே ஒருதினம் தேவையில்லை
எனினும் மகளிர் தின வாழ்த்துகள்
5 கருத்துகள்:
இந்தக் கவிதை இயல்பா இருக்குது நண்பரே.
உங்கள் எழுதுகோல் ஓயாதிருக்கட்டும்.
இரவின் நிசப்தத்தை
சன்னமாய் அறுத்தெறியும்விசும்பலில் கூட.......
எப்படித்தான் இப்படியெல்லாம் கற்பனை வருமோ? அற்புதம்! அபாரம்!!
நன்றி இப்னு ஹம்துன். ஓயாதிருக்கும் எழுதுகோலால் ஓயாமல் போகும் நிம்மதி :-)
வேணு ஐயா,
இந்த வார்த்தையெல்லாம் அசால்ட்டா நம்ம கிரைம் கதை மன்னன் இராஜேஷ்குமார் எழுதுவார்.. :-)
கண்ணில் பட்ட வலைப்பூக்களில் புதியதாய் மலர்ந்த மலரைப்போல தனித்துவமாய் தெரிகிறது இந்த கவிதை..
வாழ்த்துக்கள் சுபையர்....
நல்லா இருங்க ராசா நல்லா இருங்க!
சில மானஸ்தனுங்க டிரைவிங் டெஸ்ட் போனானுங்க ஆனால் இப்ப அதை நிறுத்திவிட்டார்கள்!
சந்தோசமா?:)))
கருத்துரையிடுக