வியாழன், 20 ஜனவரி, 2011

டோபி கட் (Dhobi Ghat) - கருத்து

வெளியான அன்றே பார்க்க சில படங்களை பார்த்தே ஆக வேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது. அதிலும் படம் எடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து காத்திருந்து படம் பார்க்கவேண்டிய அளவுக்கு சில கலைஞர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அப்படி குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் அமீர்கான்.

அமிதாப்பின் குரலில் ஆமிர்கானின் தயாரிப்பில் வந்த திரைப்படங்களைக் (aamir productions) காட்டும்போது அருமையாய் இருக்கிறது. அது டில்லிபெல்லி என்ற படத்தின் ட்ரைலர் என்று பிறகே புரிகிறது. இதையும் காத்திருந்து பார்க்கலாம் என்ற எண்ணம் உண்டானது.

இப்போது டோபிகட் படத்துக்கு வருவோம். ஹிந்தியிலும் கொஞ்சம் ஆங்கிலத்திலும் கொஞ்சம் கலந்த ஒரு திரைப்படம். ஆமிரின் மனைவியின் இயக்கத்தில் வந்திருக்கும் படம்.

கவிதையான படம் என்று சொல்லிவிடலாம். நிறைய கவிதைகள் புரிவதில்லையே!

நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களைச் சுற்றிய கதை. நான்கு பேருக்கும் எதிர்பார்ப்புகள். அது பூர்த்தியாகிறதா இல்லையா.. இதில் மும்பையின் கோரக் கரங்கள் என்ன செய்கிறது என்பதே கதை.

ஆமிர் ஒரு ஓவியர். அவருக்கும் என்.ஆர்.ஐ. பெண்ணுக்கும் உருவாகும் நட்பு ஒரு கதையாக, அந்த பெண்ணுக்கும் சலவைத் தொழிலாளி பையனுக்கு உள்ள நட்பு இன்னொரு கதை, அமீர்கானின் வீட்டில் முன்பு குடியிருந்த ஒரு பெண் தன் தம்பிக்கு சொல்லும் கடிதமாக இன்னொரு கதை.

ஒவ்வொன்றும் தனித்த கதையாக பயணித்திருந்தால் அத்தனை சிறப்பாக இருந்திருக்குமாவென்று தெரியவில்லை.

இந்தத் திரைப்படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் சில...

1. காணும் அன்றே போதையில் கலவி கொள்ளும் நாயகன் நாயகியின் மறுநாளைய உரையாடல்
2. இரண்டு டீ கொடுக்க சொன்னதும் வேலைக்காரி நாயகிக்கு கப்பிலும், சலவைத் தொழிலாளிக்கு கண்ணாடி க்ளாஸிலும் தருவது. அந்த க்ளாஸை அவள் எடுத்துக்கொண்டு வேலைக்காரியை பார்க்கும் பார்வை
3.  சிகரெட் பிடிப்பதான பாவனையில் நண்பனிடமிருந்து சிகரெட்டை வாங்கும்போது அந்த காரின் கண்ணாடிக்கும் கதவுக்கும் இடையே அவர் சிகரெட் பிடிப்பதாக காட்டுவது (உண்மையில் சிகரெட் பிடிக்கவில்லை!)
4. அந்த சலவைப் பையனின் உடன் வரும் சல்மான் கதாபாத்திரம் (மும்பை மொழியில் "டபோரி")
5. அமீரின் வீட்டில் முன்பு குடியிருந்த பெண்ணின் நடிப்பு. கண்கள் பேசுது.
6. அவள் இறந்ததும் அழும் அமீரின் நடிப்பு
7. சலவைப் பையன் ஓடி வந்து தரும் அமீரின் முகவரியை அவள் பெற்றதும் அழும் அழுகை
8. அமீரின் வீட்டுக்குப் பக்கம் இருக்கும் அந்தக் கிழவி

வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல...

இலக்கியவாதிகள் சொல்லிக்கொள்ளலாம் அருமையான திரைப்படம் என...

என்னைப் பொறுத்தவரை "காசு வேஸ்ட்".

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

இன்னும் இலக்கியவாதியாகலையா அப்போ?

வடகரை வேலன் சொன்னது…

ஹைய்யா எங்க சுபேருக்குப் பிடிக்கலை. அப்ப நல்ல படம்தான்.

அகமது சுபைர் சொன்னது…

முகிலன்,
நமக்கு அந்த கொடுப்பினை இல்ல...

வேலன் அண்ணாச்சி,

மிக்க நன்றி புரிதலுக்கு :))

koothanalluran சொன்னது…

comments reserved yet to see the film

அகமது சுபைர் சொன்னது…

கூத்தாநல்லூரான்,

மத்தவங்கள்லாம் படம் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க :)

தினேஷ் ராம் சொன்னது…

ம்ம்.. எமது அண்ணனின் மாணவரே, படம் பார்த்துட்டு வந்து பேசுறேன். :-)

-Mr.R.Din