திங்கள், 10 மார்ச், 2008

ஜல்லியடித்தல் - பாவனா புராணம்


தெ.தே.மு.க.( தெற்றுப்பல் தேவதை முன்னேற்ற கழகம்)

நம்ம நண்பர்களுக்கு ரொம்பத்தான் குசும்பு.. பாவனா படம் வந்தா உடனே டீடெயிலா மெயில் போட்டுடுவானுக..எனக்கு :-))


படம் மற்றும் அதற்கான குறள் வெண்பாக்கள்..


கல்லூரி செல்லும் சிவப்புச் சுடிதார்நின்
கைதவழும் பந்தாக நான்.



மிளகாய் உரைக்குமாம் காருதல் இல்லையா
பெண்ணிவள் கண்நோக்கி காண்.


கத்தியா நின்கையில் விட்டெறி - போதுமே
சத்தமின்றி கொன்றிட "பார்".



ஊஞ்சல் விளையாடும் உன்அழகைக் காணவே
ஆலம் கிடக்கும் தவம்



நீஅமரும் காரணமே ஊஞ்சலும் உன்னதம்
அஃதன்றோ நீவாழும் நெஞ்சு.



கோபமும் பெண்டிர் அணிகலனாம் - ஆமாம்
அவையுனக்கு உண்மையிலே சரி.


பார்வையால் பேசினால் போதுமா - ஆகாது
கோர்வையாய் கொஞ்சமே பேசு.



காதலால் காண்பது அழகன்றோ ஆதலால்
என்னையுமே காதலினி றுத்து.

3 கருத்துகள்:

அகமது சுபைர் சொன்னது…

நன்றி அனானி..

பெ. சக்திவேல் சொன்னது…

நான் படித்துவிட்டேன் நண்பரே. திரை உலகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எல்லா விஷயத்துக்கும் கொடுத்தால் நலம்.

அகமது சுபைர் சொன்னது…

நான் திரையுலகத்தை எடுத்துக்கொண்டு "குறள் வெண்பா" தான் எழுதியுள்ளேன்.

தங்களின் கருத்தை செயல் படுத்த முயற்சிக்கிறேன்.