செவ்வாய், 21 ஜூலை, 2009

அமீரக வலைப்பதிவர் மாமாநாடு - 19 ஜூலை 2009

வலைப்பூக்களில் அதிகம் ஈடுபாடு இல்லாவிட்டாலும், நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் பேராவல் முன்னிற்க, முதல் நாளே ஆசாத் அண்ணனிடம் சொல்லி, திட்டமிடல்கள் சரியாய் செய்தாயிற்று.


ஒரு மாதம் முன்பு தான் சந்திப்பு நடந்திருந்தாலும், நான் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதற்கு தமிழ்மணத்தின் சர்வாதிகாரப் போக்கை சாடிய சக்தியை ஒரு வளரும் வலைப்பூ எழுத்தாளன் எனும் முறையில் பாராட்டும் நோக்கமே முன்னெடுத்துச்சென்றது என்றால் மிகையில்லை. 


ஞாயிற்றுக்கிழமைகளில் அமீரகத்தில் விடுமுறை என்பது அத்தி பூத்தாற்போன்ற நிகழ்வு. இந்த முறை அது நடந்தபோது ஆசாத் அண்ணனுடன் பொழுதைக் கழிக்க திட்டம் தீட்டினேன்.


மதியம் உணவு முடித்துவிட்டு கினோகுனியா புத்தகக்கடை செல்வதாகவும், பிறகு அங்கிருந்து 
பதிவர் சந்திப்புக்கு போவதாயும் ஏற்பாடானது.


புத்தகக்கடையென்று சொன்னால் அது குறை. 
அதனை புத்தகக் கடல் என்றே குறிப்பிடல் முறை. 
(எப்படிடா சுபைர்..கவிதையா பேசுற..??)


மனசுக்கு லேசா பறக்குற மாதிரி ஒரு பீலிங் கிடைக்கும் நேரம் புத்தகக் கடைகளில் வாய்க்கும். புத்தகங்களின் வாசம் மட்டுமே சில பல பானவகைகளில் முங்கிய போதை தரும் காலங்களை நான் வெகு வேகமாக இழந்து வருவதாகப் பட்டது. ஒரு புத்தகக்கடைக்குப் போய் புத்தகங்கள் வாங்காது திரும்பி வந்தது அனேகமாய் இது தான் எனக்கு முதல் முறை.


உலகின் பெரிய புத்தகம் முதல் நாவல்கள் ஈடாக, பொறியியல் முதல் மருத்துவம் ஈடாக புத்தகங்களும், மொழியியலில் ஜப்பானீஷ் முதல் ப்ரெஞ்ச் ஈடாக புத்தகங்களும் இருக்கின்றன.


பொறியியலுக்கு சென்னை பாரீஸ் கார்னரில் பாதிவிலைக்கு வாங்கிய புத்தகங்களுக்கு இவை ஈடாக தெரியவில்லை. அழகழகான புகைப்படங்கள் மட்டுமே புத்தகங்களாகிவிடுவதில்லை என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.


புத்தகங்களை திருடிக்கொண்டு போனால் வாயிலில் இருக்கும் கருவி காட்டிக்கொடுத்துவிடும் என்று ஆசாத் அண்ணன் சொன்னார். நான் அதெல்லாம் மனிதன் கண்டுபிடித்தது. அதில் பிடிபடாமலே என்னால் கொண்டுபோக முடியும் என்றேன். எப்படி என்றார்.. ??


நாலுநாலு பக்கங்களாக கிழித்துக்கொண்டுபோக வேண்டும் என்றேன். அதுக்கு அப்புறம் புத்தகக் கடையில் பேசவே இல்லை என்னிடம்.. :-)


பதிவர் சந்திப்புக்கு கராமா போய் சேரும்போது தூரத்திலே ஒரு நல்ல இடத்தில் பார்க்கிங் கிடைக்க வண்டியை நிறுத்திவிட்டு, புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய் சேரும் போது மாலை 6 மணி.


நண்பர்களுடனான அறிமுகமும், புண்ணியவான்களின் வடை மற்றும் தண்ணீரில் ஆரம்பித்தது சந்திப்பு.


ஆப்பு மற்றும் ஆப்பரசனின் ஐ.பி. முகவரி வளைகுடா நாடுகளை குறிப்பிடுவதாக குண்டைப் போட்டார் குசும்பன். 


ஒரு பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பது முதல் எதற்காக பதிவெழுத வந்தீர்கள் வரை எல்லோரும் ஒரு மார்க்கமாய் பேச ஆரம்பித்தனர். 


எப்போதுமே அரட்டையாய் ஆரம்பித்த பதிவர் சந்திப்புகள் கொஞ்சமே சீரியஸாய் ஆனாலும் எஸ்கேப் ஆகிவிடும் எனக்கு ஆசாத் அண்ணனுடன் மட்டுமே ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கும் பன்னாட்டு நகரத்துக்கு (இண்டர்நேஷனல் சிட்டி) போகமுடியும் என்பதால் காத்திருக்க வேண்டியதாயிற்று.


அய்யனாரின் தீர்க்கமான வார்த்தைகளும், குரல்வழியே பொங்கிப்பாயும் வெள்ளமாய் காதுகளை நனைக்கும்போது இதமான தென்றல் காற்று வீசத்தொடங்கியிருந்தது.


ஆசிப் அண்ணாச்சியின் வழக்கமான பாணியும், மரத்தடி நட்பினைப் பற்றிய ஒரு நெகிழ்வான அறிமுகமும் மனதில் நீங்காது நிற்கும்.


ஆசாத் அண்ணனின் பதிவெழுதும் போது 10% மட்டுமே எழுதுவதாயும், மீதி 90% அதன் முழு பின்னணி தெரிந்ததாயும் இருக்கவேண்டும் என்றபோது என்னைப் பார்த்து நீயெல்லாம் எழுதவே கூடாது என்று சொன்னதாய்ப்பட்டது.


சென்ஷி, சந்திரசேகர், அப்துல் வாஹித், செந்தில், சுந்தர், ஆதவன், கீழை ராஸா, கோபிநாத்
இஸ்மத், கலை, கார்த்திக், தினேஷ், ராதாகிருஷ்ணன், லியோ சுரேஷ், வினோத் கௌதம், நாகா, பிரதாப், சுல்தான், சைய்யது  என்று பலபேர் வந்திருந்தனர்.

ஒரு இனிய மாலைப் பொழுதை சந்தோசமாய் கழித்த நினைவுகளுடன் பிரிந்தோம்.

லியோ சுரேஷை ஏன் எழுதுவதில்லை எனக் கேட்டபோது குப்பைகளாய் கிடக்கிறது வலையுலகம் என்றும், அது மாறும் வரை எழுத மாட்டேன் என்றும் சொன்னார். அதுபோல் ஆசிப் அண்ணாச்சியும் ஒரு முடிவெடுத்தால், லியோ சுரேஷ் மீண்டும் எழுதக்கூடும் எனத் தோன்றியது. ஆனால் நான் சொல்லவில்லை.. 

கிசுகிசு:

என்ன புத்தகம் போட்டிருக்கிறார்? அது ஒன்றுக்கும் உதவாது இதற்குத்தவிர என்று ஒரு பதிவர் எழுதிய புத்தகத்தை விசிறிக்கொண்டிருந்தார் ஒரு பிரபல பதிவர். அவரின் இந்த செய்கை மிகவும் மன சஞ்சலம் தந்தது.. :-)

அவர் யார் என்பதை பின்னூட்டத்துல சொல்லிடுங்க மக்கா..

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அமீரகத்தின் ஒரே 'பிரபல பதிவர்' குசும்பன் அண்ணன் தான். ஆன அவர் என்ன புத்தகத்தை விசிறினார்ன்னு நான் கவனிக்கலேங்க :-)

பெயரில்லா சொன்னது…

யோவ்...

பதிவர் மாநாட்டைப்பத்தி எழுதச் சொன்னா வீட்டுல காலைல கக்கூசுக்குப் போனதுலேருந்து தொடங்குவியா? உன்னையெல்லாம்??

குசும்பன் சொன்னது…

யோவ் சுபையர், முந்திக்கிட்டு சொன்னா பொய் உண்மை ஆயிடாதுய்யா! நல்லா இருய்யா நல்லா இரு! அப்புறம் பதிவர் சந்திப்புன்னு தலைப்பு வெச்சுட்டு என்னமோ எழுதி இருக்க அது அடுத்த பார்ட்டில் வருமா?

அகமது சுபைர் சொன்னது…

முக்கியமா ஒன்னு எழுதியிருக்கேன் அண்ணாச்சி அது பதிவர் உலகத்துக்கே ரொம்ப முக்கியம் :-)

//லியோ சுரேஷை ஏன் எழுதுவதில்லை எனக் கேட்டபோது குப்பைகளாய் கிடக்கிறது வலையுலகம் என்றும், அது மாறும் வரை எழுத மாட்டேன் என்றும் சொன்னார். அதுபோல் ஆசிப் அண்ணாச்சியும் ஒரு முடிவெடுத்தால், லியோ சுரேஷ் மீண்டும் எழுதக்கூடும் எனத் தோன்றியது. ஆனால் நான் சொல்லவில்லை.. //

சென்ஷி சொன்னது…

//லியோ சுரேஷை ஏன் எழுதுவதில்லை எனக் கேட்டபோது குப்பைகளாய் கிடக்கிறது வலையுலகம் என்றும், அது மாறும் வரை எழுத மாட்டேன் என்றும் சொன்னார்.///

அப்படியா சொன்னாரு.. என்காதுல ஏதோ கலவர பூமில கால வைக்க மாட்டேன்னு சொன்னா மாதிரில்ல இருந்தது :)

அகமது சுபைர் சொன்னது…

சென்ஷி,

ஆசிப் அண்ணாச்சி எழுதுறதை நிறுத்தச் சொன்னார் லியோ சுரேஷ்.

அண்ணாச்சி எழுதுறதுனால தான் கலவரபூமியா இருக்காம் வலையுலகம்.

:-)

கலையரசன் சொன்னது…

நீங்க என்னதான் அண்ணாச்சிய கும்முனாலும்...
நாங்க டெம்பிளேட்டா சொல்லுவோம்

"நல்லா இருடே!!"

(அடுத்த பார்ட்டுகாக வெயிட்டிங்..)
:-)

அப்துல்மாலிக் சொன்னது…

சுபைர் பதிவர்சந்திப்பா புத்த கடை விமர்சனமா

வடை போச்சே

சில சொந்த காரணங்களுக்காக சந்திப்பில் கலந்துக்கொள்ளாதது நினைத்து வருந்துகிறேன்