ஞாயிறு, 3 ஜனவரி, 2010

வாழ்த்துகள் பீகார்

இந்திய மாநிலங்களிலேயே பின் தங்கிய மாநிலம் என்றால் அது பீகார் என்று எடுத்தவுடன் சொல்லிவிடுவார்கள். அதாவது லாலு பிரசாத் யாதவ் ஆண்டு வந்த காலங்களில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாது, வக்கில்லாத வகையாக, வாழ்ந்து வந்த மக்களுக்கு நிதிஷ் குமார் மூலம் விடிவு பிறந்திருக்கிறது.


ஆம்... பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக 2004-05 ஆண்டு முதல் 2008-09 ஆண்டு வரையான ஐந்தாண்டு கணக்கில் 11.03% வளர்ந்திருக்கிறது.

அதாவது இந்தியாவின் தொழிற்துறையில் முன்ணணியில் இருக்கும் குஜராத் மாநிலத்தை விட 0.02% குறைவு. (11.05% குஜராத்).(இதே சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 8.49%)


இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், 2003-04 ஆண்டில் பிகாரின் வளர்ச்சி விகிதம் (-) 5.15%.

இதிலேர்ந்து நல்ல நிர்வாகம் இருந்தால் சிறப்பான வளர்ச்சியை எட்டலாம் என்பது புலனாகிறது.

வாழ்த்துகள் பீகார்.

1 கருத்து:

ஜீவன்பென்னி சொன்னது…

"ஆம்... பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக 2004-05 ஆண்டு முதல் 2008-09 ஆண்டு வரையான ஐந்தாண்டு கணக்கில் 11.03% வளர்ந்திருக்கு"

இது கனவா இல்ல நினைவா.

மிக்க மகிழ்ச்சியாயிருக்கு படிக்கும்போது.