நண்பன் ஒருவன் படத்திற்கான டிக்கெட் வாங்கிவைத்துக்கொண்டு "வாடா மச்சான்"னான். நானும் நம்பிப்போனேன். அதுக்கப்புறம் தான் அந்த பயங்கர நிகழ்வுகள் கோர்வையாய் வந்தது..
குசேலன் படம் வருவதற்கு முன்னாகவே தலைவர் மன்னிப்பு எல்லாம் கேட்டு சமாதானப்படுத்தி வச்சிருந்தார். அவர் படத்த பாக்குறவங்களுக்கிட்டயும் மன்னிப்பு கேட்டா ரொம்ப நல்லது.
படத்த பத்தி பேசுவோம்..
பேர் போட ஆரம்பிச்சதிலிருந்து, கைதட்டி விசில் பறந்தது. ஷார்ஜால தான் படம் பார்க்கிறோம்னு கொஞ்சம் நம்பிக்கை இல்லாம இருந்தேன். அவ்வளவு விசில்.
அழகான பாடலில் ஆரம்பிக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை, தான் ஒரு பெரிய நபரின் நண்பன் என்று சொன்னதும் எப்படி தலைகீழாகிறது என்பதுதான் படம். ஆனால் நட்பினை தெளிவாக எடுத்துக்காட்டும் எந்த காரணியும் இல்லை.
பசுபதிங்கிற ஒரு நடிகனுக்கு நடிக்க இடம் கொடுக்கவேயில்ல.. மீனா போன்ற பழம்பெரும்:-) நடிகை நடிப்பதற்கான வாய்ப்புகளும் ரொம்ப குறைவு..
ஆனால் பசுபதியின் மூத்த பெண்ணாக வரும் பெண் மட்டும் அழகாக இருக்கிறார். :-)
படத்தின் முக்கியமான வருந்தத்தக்க அம்சம், காமெடி. வடிவேலு என்ற கலைஞன் இறந்துபோய்விடலாம். இந்த மாதிரி இயக்குனரின் படங்களில் நடிப்பதற்கு பதிலாக மதுரையில் லோடுமேன் வேலையே பார்க்கப்போய்விடலாம்.
நயன்தாரா அறைக்குள் புகுந்துவிட்டு வடிவேலு அவரின் அங்க அவயங்களை கண்டுரசிப்பதாகட்டும், அதனால் அவர் மீசை வளர்வதாகட்டும், வடிவேலு கண்கள் பார்க்கும் இடங்களில் செல்லும் கேமிராவாகட்டும்.. எல்லாம் ஒரு கீழ்த்தரமான ரசனையின் வெளிப்பாடே ஆகும்.
லிவிங்க்ஸ்டன் சுழலும் நாற்காலியை பசுபதிக்கு பரிசளிக்க, இது ஏழாவது அதிசயம் என்று ஒருவர் சொல்ல, பாரடா எட்டாவது அதிசயத்தை என லிவிங்ஸ்டன் வேட்டியை தூக்கும் இடமாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு ஜீரணிக்க முடியாத அதீத அவஸ்தை நம்மை இருக்கையில் புரளச்செய்கிறது.
படத்தின் பெரிய ப்ளஸ். ரஜினி. அவர் மட்டும் இல்லாமல், வேறு யாராவது நடித்திருந்தால் இந்த படத்தை முதல் நாளே குப்பைத்தொட்டியில் எறிந்திருப்பார்கள் தமிழ்ரசிகர்கள்.
P.வாசுவைப்பற்றி தெரிந்திருந்தும், "கதபறயும்போள்" - மலையாளப்படத்தின் தழுவல் இந்தப்படத்தை பார்க்கத்துணிந்த எனக்கு செருப்பால் அடித்தது இயக்குனரின் சாமர்த்தியம். இந்தப்படத்தையும் தன்னால் கெடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
அத்தனை பாடல்களும் வலிய திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. "சினிமா சினிமா" என்ற பாடலின் ஆரம்பத்தில் "75 ஆண்டுகால தமிழ் சினிமாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்" என்ற வரிகள் மிகவும் பாதித்தாலும், பாடல் அத்தனை சிறப்பாக இல்லை. ஒரு சினிமா என்ற பெரிய ப்ராஜக்ட் எடுக்க எத்தனை வேர்வை, எத்தனை சிக்கல், எத்தனை கஷ்டம். இதெல்லாவற்றையும் காட்டாமல், சும்மா காச்சுக்கும் பிலிம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
ஆனால், சில ப்ளஸ்கள் இல்லாமல் இல்லை.. ஒன்று நயன்தாரா கவர்ச்சி..பில்லாவின் பாதிப்பு இன்னும் அகலவில்லை நயனிடமிருந்து.
இரண்டு பசுபதியின் மூத்தபெண் (அவ்வளவு அழகு..)
மூன்று இயக்குனர் சுந்தர்ராஜன் பாத்திரம். நாம் ரஜினியிடம் என்ன கேட்க நினைக்கிறோமோ அப்படியே கேட்கிறது.
ரஜினி என்ற மனிதனை எல்லோருக்கும் பிடித்திருந்தாலும், ஒரு திரைப்படமாக இதை ஜீரணிக்க முடியவில்லை. அந்த கடைசி 15 நிமிட காட்சி மட்டும் இல்லாவிட்டால், ஒரு திரைப்படம் என்ற கட்டுக்களில் இல்லாமல் போயிருக்கும்.
எது எப்படியோ, லிவிங்க்ஸ்டன் பெயரை சந்தானபாரதி சொல்வதுபோல் குசேலன் ஒரு "குப்பைசாமி"..
அன்புடன்,
சுபைர்
13 கருத்துகள்:
//ரஜினி என்ற மனிதனை எல்லோருக்கும் பிடித்திருந்தாலும், ஒரு திரைப்படமாக இதை ஜீரணிக்க முடியவில்லை.//
பாவங்க நீங்க, ரெம்ப மனசு நொந்து போயிருக்கீங்க. இப்படித்தான் நடக்க்னும்னு இருந்தா நாம என்ன செய்யமுடியும், மனசை தேத்திக்குங்க ப்ளீஸ்.
திறனாய்வு வாசித்தேன், திரைப்படம் பார்க்காததால் கருத்துக் கூற முடியவில்லை.
ஒரு ரஜினி ரசிகன் என்றமுறையில் நான் இதத்தான் எதிபார்த்தேன்.
சந்திரமுகி வாசுவினால் கடித்டெறியப்பட்ட கரும்புச் சக்கையாகவே நான் கருதினேன்.
இல்லாத ரஜினியை படம் முழுக்க வரவைப்பேன் என அவர் சொல்லும்போதே தெரிந்துவிட்டது அவர் கதையை எப்படி மாற்றியிருப்பார் என...
அருமையாக விமர்சித்துள்ளீர்கள். நானும் கிட்டத்தட்ட இதே காரத்துடன்தான் விமர்சனம் செய்திருக்கிறேன். பி.வாசு படத்தைப் பார்க்கப்போன நமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
//குசேலன் என்பவன் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு கடன் கொடுத்தவர். //
குசேலன் வேறு குபேரன் வேறு !
குசேலன் ஒரு ஏழைப் பார்பனன்,
குபேரன் பணக்கார பார்பனன் ( இந்திரன் மகன்)
Same blood...
Kathir
ஸயீத், மனச தேத்திக்கிட்டுதான் இந்த பதிவ எழுதினேன். இல்லாட்டி மக்கள் ஏமாந்துபோய்டுவாங்க.
களத்துமேடு, தயவுசெய்து பார்க்காதீங்க..
நன்றி அனானி..
கானகம், உண்மையில் P.வாசு படம் எடுப்பதை விட்டுவிட்டாலே தமிழ்சினிமா தப்பித்துவிடும்.
தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன்.
/*குசேலன் என்பவன் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு கடன் கொடுத்தவர்*/
யோவ் கடன் கொடுத்தது குசேலன் இல்லை. குபேரன்.....
வாசு அண்ணா, அந்த பிரச்சினை என்னன்னு தெரியாம தான் "???" போட்டு வச்சிருந்தேன். இப்ப மாத்திட்டேன். நன்றி.
கதிர்..உண்மை தான்பா.. Same Blood..
குசேலன் புயலில் இதை யாரு படிக்கப்போறீங்க?
தசாவதாரம், குசேலனுக்கும் - கூகிளுக்கும் என்ன சம்பந்தம்?
நன்றி
அட நீங்களும் நானும் ஒரே மாதிரி எழுதி இருக்கிறேம்!!!
நல்ல சொன்னீங்க...........
http://priyamudan-prabu.blogspot.com/
கருத்துரையிடுக