சனி, 19 டிசம்பர், 2009

இரு திரைப்படங்கள் (வேட்டைக்காரன், அவதார்)

திரைப்படங்கள் நம் வாழ்வின் செய்ய முடியாத எண்ணங்களை செய்யக்கூடிய மனிதனாக நம்மை உணரச்செய்பவை என்ற எண்ணங்கள் எப்போதும் என் மனதில் இருக்கும்.


வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெறும் ஹீரோக்கள் ஃபேண்டஸி ட்ரீம்களின் பிரதிபலிப்புகள்.

நமது காலங்களில் நாம் செய்ய இயலா செயல்களை ஹீரோக்கள் செய்யும்போது நமக்கு மிகவும் பிடித்தமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட மாஸ் ஹீரோக்களில் ஒருவர் தான் விஜய்.

நாலு பாட்டு, நாற்பது பேருக்கு அடி, ரெண்டு சோக காட்சி... எல்லாம் இருக்கும் படம் வேட்டைக்காரன்.

அனுஷ்கா அவ்வளவு அழகு... ஆனா டான்ஸ் வரல... நடிப்பு வரல... சும்மா பொம்மை மாதிரி வந்து போறாங்க...



விஜய் பையன் அழகு...சூப்பரா இருக்கான். தத்தி மாதிரி பையன் விஜயையே அவங்க அப்பா இம்புட்டு தூரம் கொண்டு வந்திருக்கார். அவர் பையன் இன்னும் அழகா இருக்கான். பார்க்கலாம்...

படத்துல இன்னொரு விஷயம் வில்லன்கள். வேதநாயகம்னா பயம்னு சொல்லும் போது நல்லா இருக்கு.

ஆனா தேவையில்லாம கேரக்டருங்க வந்து போறது ரொம்ப ஓவரு.. கூடப்படிக்கிற பொண்ணுக்கு அண்ணனாத்தான் இருக்கணும்னு ஒரு விதி வேற... இந்த ஆபாசக் கலாச்சாரத்தை (நன்றி: மனுஷ்யபுத்திரன்) என்ன செய்வது??

காமெடிக்குன்னு யாரையும் ஸ்பெஷலா போடல.. ஏன்னா விஜய் பஞ்ச் டையலாக்கே போதும்னு நினைச்சிருப்பாங்க போல... இயக்குனருக்கு முதல் படம், தில், பாட்ஷா படங்களை அப்படியே மிக்ஸில அடிச்சு கொடுத்திருக்கார்.

வேட்டைக்காரன் - தமிழ் மனங்களில் வெற்றி நடை போடும்.. சீக்கிரமே சன் டி.வி.ல ;-)

இரண்டாம் திரைப்படம் - அவதார். ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படம் பார்த்த அதே மன ஓட்டத்தில் போனால் அவதாரில் சிறப்பென்று எதுவும் இல்லை.. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தவிர..

கால் நடக்க முடியாத ஹீரோ, வேற்றுக்கிரகத்தின் மலைகளில் கிடைக்கும் அபூர்வ உலோகத்தை ஆட்டயைப் போடும் மனித இனத்தின் ரெப்ரசண்டேடிவ். அதுக்கு ஒரு சயிண்டிஸ்ட் கும்பல், செக்யூரிட்டி கும்பல், மிதக்கும் மலை, அபூர்வ உயிரினிங்கள்...

வாவ்... 3D எஃபக்ட்ல சும்மா அட்டகாசம் பண்ணி இருக்கார் இயக்குனர்.

மனித இனம் எப்படி இருந்திக்கும் சில காலங்களுக்கு முன் என்பதை நினைத்தாலெ மெய் சிலிர்க்கிறது. தலைவரின் பேச்சை தலைகீழாய் நின்றாவது முடிக்க ஆசைப்படும் கூட்டம்.

ஏகப்பட்ட வித்தியாசமான காட்சியமைப்புகள்.. கால் நடக்க முடியாத ஹீரோ கூடு விட்டு கூடு பாய்ந்து புதிய பிறவி எடுப்பதைப் போல இன்னொரு உடலில் புகுந்து மண்ணைக் காலால் தடவும் இடம் கவிதை...

வேற்றுக்கிரக பெண்ணுடன் காதலும், காமமும்...வாவ்... அழகான கவிதையை மூன்றாம் பரிமாணத்துடன் காட்டும் அழகு...

ஒவ்வொரு உயிரினத்துக்கும் உண்டான ஸ்பெஷல் அழகு... மிருகங்கள்..அவைகளின் உதவி..

மனிதனின் ஆசை...அது என்றும் அடங்காது... ஆனால் ஆசை தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் தருகிறது. வேறோர் உலகம் எப்படி இருக்கும், எப்படி சுவாசிக்கலாம்...எப்படி இருப்பார்கள்..??இதுபோன்ற கற்பனைக்கு உருவம் கொடுத்த இயக்குனருக்கும், கிராஃபிக்ஸ் வல்லுனர்களுக்கும், அதன் உழைப்பில் கலந்த ஒவ்வொருவருக்கும் சல்யூட்.

அழகான அந்த பைலட் பொண்ணுக்காக (Michelle Rodriguez) இன்னொரு தடவை பார்க்கலாம் ;-)



அவதார் - எஃபக்ட்ஸ்க்காக.

8 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

//அழகான அந்த பைலட் பொண்ணுக்காக//

ம்ம்ம் என்னத்ததான் சொல்லு நம்ம ஊரு காஸ்டியும் டிசைனர் மாதிரி ஆவுமா? இத மாதிரி உட்காந்து கொடுக்கும் போஸுக்கு டிரஸ் எப்படி இருந்திருக்கும் கேமிரா ஆங்கிள் நம்ம ஊரு படத்தில் எப்படி இருந்திருக்கும்:) நம்ம ஊருகாரன் நம்ம ஊருகாரன் தான்யா:)

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//குசும்பன் சொன்னது…
//அழகான அந்த பைலட் பொண்ணுக்காக//
ம்ம்ம் என்னத்ததான் சொல்லு நம்ம ஊரு காஸ்டியும் டிசைனர் மாதிரி ஆவுமா? இத மாதிரி உட்காந்து கொடுக்கும் போஸுக்கு டிரஸ் எப்படி இருந்திருக்கும் கேமிரா ஆங்கிள் நம்ம ஊரு படத்தில் எப்படி இருந்திருக்கும்:) நம்ம ஊருகாரன் நம்ம ஊருகாரன் தான்யா:)//

என்ன‌ தான் அவ‌ங்க‌ பிர‌மாண்ட‌ம் காட்னாலும் இந்த‌ விஷ‌ய‌த்தில் ந‌ம்ம‌ கிட்ட‌ முடியுமா?

அகமது சுபைர் சொன்னது…

@குசும்பன்,

இதெல்லாம் நம்ம பயலுவ கிட்ட முடியுமா?? மழைல நனைஞ்சுக்கிட்டே வரும் அனுஷ்கா தான் வேட்டைக்காரன் படத்துல டாப் சீன் ;-)

அகமது சுபைர் சொன்னது…

@கரிசல்காரன்,

அதேதானுங்க..

Prathap Kumar S. சொன்னது…

அனுஷ்காவின் வேட்டைக்காரன் கவர்ச்சி ஸ்டில்லை போடாடததற்கு கடும்கண்டனம் தெரிவிக்கிறோம்...

கலையரசன் சொன்னது…

இதுதான் நீங்க படிக்கிற லட்சனமா சாமி?

ரைட்டு.. நான் கூட நீ அண்ணாச்சி அழைக்கிறார் உலகப்பட ரிலீஸ்க்கு வராம ஏதோ முக்கியமான வேலையா போயிட்டியோன்னு நினைச்சேன்!!

போனதுதான் போனியே.. எங்களையும் கூப்பிட்டுட்டு போயிருந்தா, நாங்களும் தப்பிச்சிருப்போமுலல?

நல்லாவே...யிரு ராசு!!!!

சென்ஷி சொன்னது…

வாழ்க.. வளமுடன்... :)

அப்துல்மாலிக் சொன்னது…

நல்ல விமர்சனம், முதல் நாளே பார்த்தாச்சா, இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்துதான் அதைப்பார்ப்பதை தவிர்த்தாச்சு