செவ்வாய், 26 செப்டம்பர், 2006

சவூதி அரேபிய வாழ்க்கை! - ஒரு சிந்தனை

கனவுகளுடன் விமானம் ஏறி கையசைத்தேன்.

காகிதங்களுடன் போராடலாம் என்றிருந்தேன்.

இங்கே கற்களுடனும் கான்க்ரீட்டுடனும் போராட்டம்.

தமிழ் மட்டுமே போதும் என்றிருந்த என்னை மலையாளத்தின் அருமை புரிய வைத்த தேசம்.

காதலி கண்ணீர் துளியில் நான் எண்ணெய் வெளியில்
மரித்துப் போனது சொந்தம் மட்டுமா? என் மனிதமும் கூடத்தான்.

பணத்திற்காக பாலைவனத்தில் நான் இருக்க...
பாசத்திற்காக ஏங்கும் நாட்கள் மிச்சமிருக்க....
மோரும் பழங்களும் மட்டுமே உணவான நாட்களும் உண்டு.

உறக்கம் வராமல் புறண்ட நாட்களும் உண்டு.

என்ன தான் உழைத்தாலும் உண்மையில் என்னவோ மனதில் ஒரு வெற்றிடம் மட்டுமே மிச்சம்.

எதிர் பார்ப்போம் ஏதாவது நல்லது நடக்குமா
நம் குடும்பத்திற்கு!

1 கருத்து:

வடுவூர் குமார் சொன்னது…

கவலை வேண்டாம்,நல்லது நடக்கும்.
சில மாதங்கள் இப்படித்தான் இருக்கும்... பிறகு,

“பழகிவிடும்”.