செவ்வாய், 26 செப்டம்பர், 2006

நவீன ஆத்திச்சூடி

அகம் என்னை ஏச
ஆக்கம் என்னை பரிகசிக்க
இயக்கம் நின்று போக
ஈகை மறந்து போக
உணவு மட்டுமே வாழ்க்கையாக
ஊமையாய் அலுவல் செய்ய
எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் கண்ணீராக
ஏக்கங்கள் மட்டுமே நிலைத்திருக்க
ஐயம் இன்றி சொல்வேன் நான்
ஒன்றாக உறவுகள் இருக்கும் பச்சம்
ஓடி வருவேன் அலைபோல்
அஃதல்லவோ என் தேடல்...

1 கருத்து:

Raghs சொன்னது…

நல்ல முயற்சி தோழரே..

தொடருட்டும் உங்கள் கலைப்பயணம்..